சனி, 28 ஏப்ரல், 2012

கீழையூர் மைய வாழ்த்துப்பா

பெரியநாயகம் செங்கோல்மேரி இல்வாழ்வில்,
அரியநாயகரே! அறிவில்நல் ஸ்தனிஸ்லாஸ் 
சிறிய செயலிலும் தனித்துவம் படைக்கின்ற 
பெறிய உள்ளமே! பண்பில்நல் படைப்பாளியே! 

செலின் ராஜகுமாரி இதய சாம்ராஜ்யத்தின் 
நிரந்தர முதலிடே! நிம்மதிப் பெருமூச்சே!
நன் மக்கட்பேறு நலமாய் அமைத்திட்ட 
சமுதாயத்தவரே!சமத்துவப் பூஞ்சோலையே!

புத்தகங்களின் தேன்நுகரும் அறிவுத்தும்பியே!
விலையில்லா விமர்சனத்தின் விமர்சகரே!
நல்ல தகவல்களை குறிப்பெடுத்துப்பாராட்டும் 
பண்புசீலரே! உரை வீச்சில் வித்தகரே!

வேளைநகர் அரிமா சங்கத்தின் 
சரியாசனமே! சரிஎது தவறெது 
சட்டென தரம் பார்க்கும் உரைகல்லே!
புதியதலைமுறையின் இளைய தலைமுறையே!

பேச்சினில் கருத்தினில் காட்டாற்று வெள்ளம் 
தனித்துவ மகத்துவத்தின் ஐ.எஸ்.ஐ தரச்சான்றே!
உலகத்தின் ஓட்டத்தின் உயர்வான சிந்தனையில் 
பணிஓய்வு காலமது உறுதுணையாய் இருக்கட்டும்...            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக